ஆபரேஷன் சிந்தூரின் லோகோவை உருவாக்கியது யார்? இந்திய ராணுவம் வெளியிட்ட தகவல்!

By : Sushmitha
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி நடந்த பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பகைவாம் பகுதி நடந்த பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிர் இழந்தனர் இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் ஆண்கள் மட்டுமே உயிர் இழந்தனர் அதனால் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது
அதிலும் குறிப்பாக இந்த தாக்குதலை கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிக்கா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் தலைமை தாங்கினார் இந்த செய்தி இந்தியா முழுவதும் பாராட்டை பெற்றதோடு உலக நாடுகள் கவனத்தையும் இருந்தது மேலும் இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைத்ததற்கு காரணமும் கணவர்களைக் கொன்று பெண்களின் குங்குமத்தை அழித்தவர்களை பழி தீர்ப்பதற்காகவே என்று கூறப்பட்டது பிரதமர் நரேந்திர மோடி இந்த பெயரை சூட்டியதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் ஆப்ரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட சின்னத்தை கூடுதல் தொடர்பு இயக்குநரத்தின் சமூக ஊடகப் பிரிவால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்று ராணுவம் தெரிவித்துள்ளது அதாவது சிந்தூர் என்ற லோகோவில் உள்ள முதல் O எழுத்தில் குங்குமம் நிறைந்த கிண்ணம் வைக்கப்பட்டிருந்தது அதற்கு அடுத்து இருந்த O இல் சிறிதளவு குங்குமம் சிதறி கிடந்தது இந்த லோகோவும் இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு வைத்த பெயரும் தற்போது இந்தியாவின் துல்லியமான தாக்குதலின் அடையாளமாக மாறி உள்ளது இந்தச் சின்னம் இந்தியர்களை அதிகமாக கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
