Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டெம் தொழில்நுட்பத்தில் கலக்கும் இந்தியா: விடாமுயற்சியாக உழைக்கும் மோடி அரசு!

ஸ்டெம் தொழில்நுட்பத்தில் கலக்கும் இந்தியா: விடாமுயற்சியாக உழைக்கும் மோடி அரசு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 May 2025 5:01 PM IST

ஸ்டெம் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகள் குறித்த சுய மதிப்பீடு, அறிக்கையிடல் கட்டமைப்பில் உள்ளடக்கத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிக்க பேராசிரியர் அஜய் சூட் தலைமையில் உயர்நிலைக் கூட்டம். மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம், பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்து, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளின் உள்ளடக்கம் குறித்த சுய மதிப்பீடு மற்றும் அறிக்கையிடல் கட்டமைப்பை செயல்படுத்துவது குறித்து விவாதிக்க 2025 ஆம் ஆண்டு மே 28-ம் தேதி உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.


மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திறன் மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.பாலசுப்பிரமணியம், உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் அறிவியல் செயலாளர் டாக்டர் பர்விந்தர் மைனி, உயர்கல்வித் துறையின் இணைச் செயலாளர் சௌமியா குப்தா, உயர்கல்வித் துறையின் டிடிஜி நவனிதா கோகோய், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் கொள்கை மற்றும் கல்வித் திட்டமிடல் பணியகத்தின் இயக்குநர் டாக்டர் அமித் தத்தா ஆகியோர் கலந்து கொண்டனர். சமூக செயல்பாடு மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் பயிற்சியை முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம், திறன் மேம்பாட்டு ஆணையம், உயர்கல்வித் துறை மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.

ஸ்டெம் உள்ளடக்கம் தொடர்பான நுணுக்கமான இடைவெளிகளை பூர்த்தி செய்யும் வகையில் அதற்கான சூழல் அமைப்பைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை மதிப்பீடு செய்வது தொடர்பாக இதில் விவாதிக்கப்பட்டது. "ஸ்டெம் துறைகளின் உள்ளடக்கம் என்பது தார்மீக கட்டாயம் மட்டுமின்றி, அறிவியல் மற்றும் மேம்பாடு ஆகியவற்றை உள்ளக்கியதாகும். பன்முகத்தன்மை கொண்ட கண்ணோட்டங்கள். புதுமை, மிகவும் பொருத்தமான ஆராய்ச்சி மற்றும் சமவிளைவுகள் போன்ற அம்சங்கள் குறித்து பேராசிரியர் சூட் எடுத்துரைத்தார். இந்தியாவில் உள்ள சூழலில், நமது மக்கள்தொகை, பன்முகத்தன்மை மற்றும் சமூக-பொருளாதாரம் போன்ற சிக்கலான தன்மையுடன், உள்ளடக்கிய அறிவியல் சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவது சவாலாகவும் அவசியமாகவும் இருக்கிறது" என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News