பிரதமரின் மலிவு விலை மருந்துகள்: தமிழக இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சி!

By : Bharathi Latha
சமூக ஈடுபாடு மற்றும் இளைஞர் திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதற்கான இந்திய அரசின் பரந்த தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மருந்துத்துறையுடன் இணைந்து, 'சேவை செய்வதன் மூலம் கற்றுக்கொள்ளுங்கள்' என்ற தேசிய பிரசாரத்தின் கீழ் பிரதமரின் மலிவு விலை மருந்தகம் பற்றிய அனுபவக்கற்றல் திட்டத்தைத் தொடங்குகிறது.
இது 15 நாள் பயிற்சி திட்டமாகும். ஒரு மாவட் டத்துக்கு 5 மருந்தகங்களில் 5 தன்னார்வலர்கள் இந்த பயிற்சி பெறுவார்கள். இந்திய குடிமக்களுக்கு மலிவு விலையில், தரமான பொதுவான மருந்துகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த மையங்களின் செயல்பாட்டை இளைஞர்கள் நேரடியாக தெரிந்துகொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மை பாரத், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் மருந்தியல் கல்லூரி மாணவர்கள், இளைஞர் அமைப்பினர் பங்கேற்கிறார்கள்.
