Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வதேச விமான போக்குவரத்து சங்கம்:விமான போக்குவரத்து துறையை வேறு ஒரு புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்-பிரதமர் மோடி!

சர்வதேச விமான போக்குவரத்து சங்கம்:விமான போக்குவரத்து துறையை வேறு ஒரு புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்-பிரதமர் மோடி!
X

SushmithaBy : Sushmitha

  |  2 Jun 2025 9:26 PM IST

புதுடெல்லியில் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் சார்பில் ஆண்டு விழா கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட பிரதமர் உரையாற்றினார்

உலக விமான போக்குவரத்து துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது அதோடு நம் நகரங்களுக்கு மத்தியில் உள்ள பகுதிகளில் மட்டுமே நமது பயணம் கட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது விண்வெளி பயணம் என்பதை வணிகமயமாக்கி அதில் மனிதர்கள் பயணிக்கும் வண்ணம் மாற்ற வேண்டும் என்ற எண்ணமும் மனிதர்கள் கனவு கண்டு வருகின்றனர்

ஆனால் இதற்கு சிறிது காலம் இருக்கிறது என்பது உண்மைதான் இந்த மாற்றம் புதுமைக்கான ஒரு பெரிய மாற்றமாகவும் விமான போக்குவரத்து எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதையும் காட்டுகிறது ஆனால் இவற்றிற்கு வேண்டிய சந்தையும் மனித வளமும் புதுமையைப் படைக்க விரும்பும் திறமையான மக்களும் நம்மிடம் உள்ளனர்

மேலும் அவர்கள் செயற்கை நுண்ணறிவு ரோபோட்டிக்ஸ் எரிசக்தி துறைகளில் புதிய சகாப்தங்களை கண்டுபிடிப்பவர்களாக உள்ளனர் இந்த திறன்களை பயன்படுத்தி நாட்டின் விமான போக்குவரத்து துறையை வேறு ஒரு புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று உரையாற்றியுள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News