Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா: மூவர்வணக் கொடியுடன் சைக்கிள் ஓட்டி பேரணி!

இந்தியா: மூவர்வணக் கொடியுடன் சைக்கிள் ஓட்டி பேரணி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Jun 2025 6:28 PM IST

உடல் திறன் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வு நடத்தப்படுகிறது. இதன் 25வது வாரமான இன்று மூவர்வணக் கொடியுடன் சைக்கிள் ஓட்டுதல் பேரணி நடைபெற்றது. இன்று காலை நாடு இந்தப் பேரணி முழுவதும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்வுக்கு மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார். தேசபக்தி, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான கருத்துக்களை எடுத்துரைக்கும் கலவையான அம்சமாக இது அமைந்தது.

டெல்லியில் மேஜர் தியான்சந்த் தேசிய மைதானத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 1500 க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். ஒலிம்பிக் பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத், கிரிக்கெட் வீரர் சபா கரீம், மல்யுத்த வீரர் சரிதா மோர், பாலிவுட் நடிகை ஷர்வாரி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். ஆயுதப்படைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், குறிப்பாக சமீபத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடக்கையின் வெற்றியை எடுத்துரைக்கும் வகையில், இன்றைய நிகழ்வு அமைந்துள்ளதாக அமைச்சர் மாண்டவியா கூறினார். உடல்தகுதியும் தேசபக்தியும் இதில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


இந்த சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வை நாட்டின் பல பகுதிகளில் கேலோ இந்தியா மையங்கள், கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சி மையங்கள் நடத்தின. அகர்தலாவில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் நடைபெற்ற பேரணியை அர்ஜுனா விருது பெற்ற ஒலிம்பிக் வீராங்கனை தீபா கர்மாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உத்தரகண்ட்டில் நடைபெற்ற பேரணியில் மாநில விளையாட்டு அமைச்சர் திருமதி ரேகா ஆர்யாவும் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் அந்த மாநில விளையாட்டு அமைச்சர் கிரிஷ் யாதவும் பங்கேற்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News