விவசாயிகளின் நலனை ஊக்குவிக்கும் மோடி அரசு: மத்திய அமைச்சர் பெருமிதம்!

By : Bharathi Latha
வேளாண் வளர்ச்சிக்கான சங்கல்ப இயக்கத்தின் நான்காவது நாளில், மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உத்தரபிரதேசத்தின் மீரட்டில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். மீரட்டின் தப்துவா கிராமத்தில், மத்திய வேளாண் அமைச்சர் விவசாயிகளுடன் பேசினார். அதைத் தொடர்ந்து ஜங்கேதி கிராமத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த நிகழ்வின்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சௌகான், கிராமங்களில் இதுபோன்ற உரையாடல்களை நடத்துவதன் நோக்கம் மேம்பட்ட விவசாய முறைகளை ஊக்குவிப்பது தான் என தெரிவித்தார்.
உற்பத்தியை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும், விளைபொருட்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்யவும், இழப்புகளைத் தடுக்கவும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் எடுத்துரைத்தார். இவையே, வேளாண் வளர்ச்சிக்கான சங்கல்ப இயக்கத்தின் முக்கிய நோக்கங்களாகும் என சிவராஜ் சிங் சௌகான் கூறினார்.
