Kathir News
Begin typing your search above and press return to search.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு: வெளியான முக்கிய தீர்ப்பு!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு: வெளியான முக்கிய தீர்ப்பு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Jun 2025 6:31 PM IST

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, அதே வளாகத்தில், கடந்தாண்டு டிசம்பர் 23ம் தேதி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அடித்து விரட்டி விட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவி அளித்த புகாரை அடுத்து, கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தி.மு.கவை சேர்த்த அனுதாபி ஞானசேகரன் கடந்தாண்டு டிசம்பர் 25ல் கைது செய்தனர். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ஞானசேகரனுக்கு எதிராக, நுாற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் 70க்கும் மேற்பட்ட சான்று ஆவணங்களை, கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்தது.இந்த வழக்கில் தண்டனை விபரங்களை நீதிமன்றம் அறிவித்தது.


ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News