Kathir News
Begin typing your search above and press return to search.

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசு கொடுத்த முக்கிய அப்டேட்!

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசு கொடுத்த முக்கிய அப்டேட்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 Jun 2025 11:18 AM IST

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 01, 00:00 மணியாக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரம்பு தேதி 2026 அக்டோபர் 01, 00:00 மணியாக இருக்கும். மேற்குறிப்பிட்ட தேதிகளுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் நோக்கம் பற்றிய அறிவிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் பிரிவு 3-ன்படி, 16.06.2025 (தோராயமாக) அன்று அரசிதழில் வெளியிடப்படும்.


மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990-ன் படி இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடைசியாக 2011-ல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியலிடுதல் (2010 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை), இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2011 பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 28 வரை), இதற்கான வரம்பு தேதி 2011 மார்ச் 01, 00:00 மணியாக இருந்தது.

ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான வரம்பு தேதி 2010 அக்டோபர் 01, 00:00 மணியாக இருந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-க்கான முதல்கட்ட தயாரிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், களப்பணி சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020 ஏப்ரல் 1 முதல் தொடங்கவிருந்தது. இருப்பினும் நாடு முழுவதும் கொவிட் 19 பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News