மோடி அரசின் லைஃப் இயக்கம்: சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நமது கடமை!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்; புவி அறிவியல் துறை இணையமைச்சரும், பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், "அடுத்த தலைமுறையினருக்காக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நமது கடமை" என்றார்.
உலகளாவிய காலநிலை நடவடிக்கையில் இந்தியாவின் முன்னணி பங்கை அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார், குடிமக்களும் நிறுவனங்களும் நிலையான நடைமுறைகளை ஒரு தேசிய கடமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஏற்பாடு செய்திருந்த தத்வா (காலநிலை நடவடிக்கைகள் மூலம் காற்று, (உயர்வு) வெப்பநிலை, நீர் (தரம்) ஆகியவற்றை மாற்றியமைத்தல்) நிகழ்வில் மெய்நிகர் முறையில் உரையாற்றினார். காலநிலை மீள்தன்மைக்கான இந்தியாவின் அணுகுமுறை அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு இரண்டிலும் வேரூன்றியுள்ளது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
"பூமி நமக்கு சுத்தமான காற்று, நன்னீர், வளமான நிலம் என அனைத்தையும் தருகிறது. ஆனால் இந்த பரிசுகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்" என்று டாக்டர் ஜிதேந்திர சிங், விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் நிறைந்த அரங்கில் குறிப்பிட்டார். மாசடைதல், காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரித்த அவர், இந்த சவால்களை எதிர்த்துப் போராடுவது, நடத்தை மாற்றம் மற்றும் லைஃப் இயக்கம் போன்ற வாழ்க்கை முறை சார்ந்த இயக்கங்களால் செயல்படுத்தப்படும் ஒரு கூட்டுப் பொறுப்பாக மாற வேண்டும் என்றார்.