Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாய நலனுக்கான முயற்சிகள் அதிக வீரியத்துடன் தொடரும்: பிரதமர் மோடி உறுதி!

விவசாய நலனுக்கான முயற்சிகள் அதிக வீரியத்துடன் தொடரும்: பிரதமர் மோடி உறுதி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Jun 2025 10:53 PM IST

கடந்த 11 ஆண்டுகளில் விவசாயிகளுக்கான அரசின் ஆதரவு முயற்சிகளின் நீண்டகாலத் தாக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக் காட்டியுள்ளார். இது விவசாய சமூகத்திற்கு கண்ணியம் மற்றும் முன்னேற்றத்துக்கான குறிப்பிடத்தக்க வளர்ச்சி கட்டத்தைக் குறிக்கிறது. பிரதமர் கிசான் சம்மான் நிதி மற்றும் விவசாயிகள் பயிர்க் காப்பீடு போன்ற முக்கிய முயற்சிகளை அவர் எடுத்துரைத்துள்ளார். அவை விவசாயிகளின் நலனுக்காக அரசு எடுத்த முக்கியமான நடவடிக்கைகள் என்று அவர் விவரித்தார்.


குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து அதிகரிப்பதால், நாட்டின் உணவு உற்பத்தியாளர்கள் தங்கள் பயிர்களுக்கு நியாயமான விலைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், அவர்களின் வருமானத்திலும் உயர்வை அனுபவித்து வருகின்றனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு சேவை செய்வது தமது அரசுக்கு கிடைத்த ஒரு பாக்கியம் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். கடந்த 11 எஆண்டுகளை நினைவுகூர்ந்து, அரசின் பல்வேறு முயற்சிகள் விவசாயிகளிடையே முன்னேற்றத்தை ஊக்குவித்ததுடன் மட்டுமல்லாமல், விவசாயத் துறையின் ஒட்டுமொத்த மாற்றத்திற்கும் பங்களித்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

மண் வளம் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற முக்கிய அம்சங்களில் அரசு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளதால், அவை பெரிதும் பயனளித்துள்ளன என்று பிரதமர் கூறியுள்ளார். விவசாய நலனுக்கான நமது முயற்சிகள் வரும் காலங்களில் அதிக வீரியத்துடன் தொடரும் என்று கூறியுள்ள திரு மோடி, நமது விவசாயிகளின் கண்ணியம் மற்றும் முன்னேற்றத்துக்காக நாங்கள் பணியாற்றியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News