Kathir News
Begin typing your search above and press return to search.

ஏழு மாவட்டங்கள் பயனடையும் வகையில் கூடுதலாக இரண்டு ரயில் பாதை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ஏழு மாவட்டங்கள் பயனடையும் வகையில் கூடுதலாக இரண்டு ரயில் பாதை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
X

SushmithaBy : Sushmitha

  |  11 Jun 2025 7:35 PM IST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ரயில்வே அமைச்சகத்தின் மொத்தம் ரூ6,405 கோடி மதிப்பிலான இரண்டு கூடுதல் ரயில் பாதை திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது

கோடெர்மா - பர்கானா இரட்டைப் பாதைத் திட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி உற்பத்தி செய்யும் சுரங்கப் பகுதி வழியாக செல்லும் ரயில் பாதை மற்றும் பாட்னா - ராஞ்சி இடையே மிகக் குறுகிய ரயில் இணைப்புப் பாதையாக செயல்படுத்தப்பட உள்ளது

பல்லாரி - சிக்ஜாஜூர் இரட்டைப் பாதைத் திட்டம் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ரயில் பாதை கர்நாடகா மாநிலம் பல்லாரி சித்ரதுர்கா மாவட்டங்கள் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம் வழியாக செல்கிறது

இந்த இரண்டு திட்டங்களும் ரயில் வழித்தடத்தை கணிசமாக அதிகரிக்க உதவுகிறது. இதன் விளைவாக ரயில்வே துறையின் செயல்பாட்டுத் திறன் மற்றும் சேவைகள் மீதான நம்பகத்தன்மை மேம்படும் இந்த பல்பாதை ரயில் பாதை திட்டங்கள் பயணிகளின் கூட்ட நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப செயல்படுத்தப்பட உள்ளது இந்த திட்டங்கள் இப் பிராந்தியத்தில் வசிக்கும் மக்கள் தற்சார்பு நிலையை எட்ட வகை செய்வதுடன் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கிறது

ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் சாத்தியமான பல்வேறு ரயில் வழித்தடங்களை இணைக்கும் வகையில் பிரதமரின்-விரைவு சக்தி தேசிய பெருந் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. மேலும் பயணிகள் சரக்குகள் மற்றும் சேவைகளின் தடையற்ற இயக்கத்திற்கும் இது வகை செய்கிறது

ஜார்க்கண்ட் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு திட்டங்களும் ரயில்வே கட்டமைப்பில் மேலும் 318கி.மீ தொலைவிற்கு ரயில் பாதையை கணிசமான அளவு அதிகரிக்க உதவுகிறது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News