உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்:ஐஎன்எஸ் அர்னாலா!

By : Sushmitha
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐஎன்எஸ் அர்னாலாவை இந்திய கடற்படை தளபதி அனில் சவுகான் இந்திய கப்பல் கடற்படையிடம் ஒப்படைத்தார்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாரம்பரிய மிக்க அர்னாலா கோட்டையை நினைவு கூறும் வகையில் இந்த கப்பலுக்கு ஐஎன்எஸ் அர்னாலா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்தக் கப்பல் 77 மீட்டர் நீளம் கொண்டது மேலும் டீசல் இன்ஜின் மற்றும் வாட்டர் ஜெட் சேர்த்து இயக்கப்படும் மிகப்பெரிய இந்திய கடற்படை போர் கப்பலும் இதுவே
அதுமட்டுமின்றி நீருக்கு அடியில் கண்காணித்து தேடல் மற்றும் மீட்பு மற்றும் தீவிர கடல் சார் நடவடிக்கைகள் போன்ற பணிகளுக்காக இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கப்பல் கடற்படையில் இணைவதால் கடலோரப் பகுதிகளில் நீர்மூழ்கி கப்பலுக்கு எதிரான இந்திய கடற்படையின் பலம் வலிமையாகும் எனவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
