இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பம்: மாபெரும் முன்னேற்றம், மோடி அரசு சாதனை!

By : Bharathi Latha
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் பெரும் முன்னேற்றம் கண்டு வருவது குறித்த கட்டுரை ஒன்றை சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். மக்களை மையமாகக் கொண்ட அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பம் தற்போது வாழ்க்கையின் ஒரு அங்கமாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல், மாணவர்களின் திறனை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய காரணிகளாகத் திகழும் துறைகளை மேம்படுத்துதல் என அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளதை பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது, "கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் மக்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதில் அளித்துள்ள பிரதமர் விண்வெளி தொழில்நுட்பம் தற்போது கிராமப்புற விவசாயிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்"
