திராவிட மாடலின் அரசு பேருந்து:தென்காசி அருகே மொத்தமாக கழன்ற லேயர் ஜாயிண்ட் வீலிங்!

By : Sushmitha
தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கின்ற அரசு பேருந்துகளின் நிலைமை நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சயை பெற்று வருகிறது நிற்க வேண்டிய நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் அரசு பேருந்துகள் பழுதாகிய நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு பேருந்துகள் மழைக்காலத்தில் ஒழுகும் அரசு பேருந்துகள் அமர்வதற்கு போதிய இருக்கைகள் இல்லாத பேருந்துகள் என பல குற்றச்சாட்டுகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் மதுரையில் இரந்து குற்றாலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறம் உள்ள லேயர் ஜாயிண்ட் வீலிங் மொத்தமாக கழன்று சாலையில் ஓடி உள்ளது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பனிமலையைச் சேர்ந்த அரசு பேருந்தை மதுரையில் இருந்து குற்றாலம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது தென்காசி மாவட்டம் இடைக்கால் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது இதனால் பேருந்தில் பயணித்த சுமார் 87 பயணிகளில் மாணவர்கள் உட்பட நான்கு பேருக்கு லேசான காயத்தோடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிள்ளனர்
போக்குவரத்திற்கு எளிதாக உள்ள அரசு பேருந்தை மக்கள் அதிகமாக நாடுகின்ற நிலையில் பேருந்தின் மொத்த பின்புறம் உள்ள லேயர் ஜாயிண்ட் வீலிங் கலந்து விழுந்து உள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
