Kathir News
Begin typing your search above and press return to search.

இஸ்ரேல்-ஈரான் போர்: பதற்றங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடிக்கு வந்த முக்கிய அழைப்பு!

இஸ்ரேல்-ஈரான் போர்: பதற்றங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடிக்கு வந்த முக்கிய அழைப்பு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Jun 2025 2:11 PM IST

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியானிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை, குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடந்து வரும் மோதல்கள் குறித்து பிரதமரிடம் ஈரான் அதிபர் பெஷஷ்கியான் விரிவாக விளக்கிக் கூறினார். இது தொடர்பாக அவரது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.


சமீபத்திய பதற்றங்கள் குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையை பிரதமர் வெளிப்படுத்தினார். இந்தியா அமைதி மற்றும் மனிதநேயத்தின் பக்கம் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். இந்த சூழலில், முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக உடனடியாக பதற்றத்தைக் குறைத்தல், பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் ஆகியவற்றின் அவசியத்தைப் பிரதமர் வலியுறுத்தினார். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கு இந்தியாவின் ஆதரவை அவர் மீண்டும் தெரிவித்தார்.

இந்திய சமூகத்தினர் பாதுகாப்பாக தாயகம் திரும்பி வருவதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் பெஷஷ்கியானுக்கு நன்றி தெரிவித்தார். வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, அறிவியல், தொழில்நுட்பம், மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்றுவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். தொடர்ந்து பரஸ்பரம் தொடர்பில் இருக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News