பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவில் ஏற்பட்ட வளர்ச்சி: பட்டியலிட்டு விளக்கிய மத்திய அமைச்சர்!

By : Bharathi Latha
மத்திய பணியாளர் நலன் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தூர்தர்ஷன் செய்தி அலைவரிசைக்கு பிரத்யேக நேர்காணல் அளித்தார். அதில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த 11 ஆண்டுகளில் இளைஞர்களின் ஆர்வத்தை ஜனநாயகப்படுத்துவதன் மூலம் குடிமைப் பணி தேர்வு நடைமுறைகள் ஜனநாயகமயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கடந்த 11 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும், உள்கட்டமைப்பு, நிர்வாகம், தொழில்நுட்பம் அல்லது இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற துறைகளில் ஒரு புதிய மைல்கல்லைக் குறித்து வந்துள்ளது எனவும் ஒவ்வொரு இந்தியருக்கும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத் துறையில், 2014-ல் வெறும் 50 புத்தொழில் நிறுவனங்கள் இருந்த நிலையில் அது 2024-ல் 10,075 க்கும் கூடுதலாக க அதிகரித்துள்ளது என அவர் கூறினார். இந்தியாவின் வளர்ச்சியில் வடகிழக்கு மற்றும் ஜம்மு - காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார். பல ஆண்டுகளாக, இந்த பிராந்தியங்கள் ரயிலுக்காகக் காத்திருந்தன எனவும் ஆனால் இப்போதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பள்ளத்தாக்குகளில் ரயில்கள் ஓடுகின்றன என்றும் அவர் கூறினார். விண்வெளி மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா முன்னேறி வருவதை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார்.
உலகம் இப்போது இந்தியாவுடன் தீவிரமாக ஒத்துழைத்து, அறிவியல் திறன்களை அங்கீகரித்து வருவதாகவும், அவர் கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில் மக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கலை உருவாக்கிய பல முக்கிய நிர்வாக சீர்திருத்தங்களையும் டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் (DLC) அறிமுகப்படுத்தப்பட்டது குறித்தும் அமைச்சர் குறிப்பிட்டார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கானது மக்கள் ஆதரவுடன் எட்டப்படும் என்றும் ஜிதேந்திர சிங் கூறினார்.
