ஏற்றுமதியை இனி மாவட்டங்களில் நடத்தலாம்:மாவட்டங்கள் புதிய வர்த்தக மையங்களாக உருவாக்கப்படும்!நிர்மலா சீதாராமன்!

By : Sushmitha
இந்தியாவின் ஏற்றுமதிக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலகளாவிய சந்தைகளை அணுக ஏற்றுமதியாளர்கள் இனி சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இருந்து செயல்படத் தேவையில்லை என்பதை கூறியுள்ளார்
அதாவது ஏற்றுமதி செய்ய நீங்கள் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருக்க வேண்டியதில்லை ஆனால் நீங்கள் அதை மாவட்டங்களில் இருந்து செய்யலாம் என்று இன்று ஜூன் 24 புது தில்லியில் நடைபெற்ற இந்திய எக்சிம் வங்கி வர்த்தக மாநாடு 2025 இல் சீதாராமன் கூறியுள்ளார் உலகளாவிய ஏற்றுமதிகள் 4 சதவீதம் வளர்ச்சியடைந்தாலும் இந்தியாவின் ஏற்றுமதிகள் 6.3 சதவீதம் அதிகரித்து இதுவரை இல்லாத அளவுக்கு 825 பில்லியன் டாலர்களை எட்டியது இது 2013 இல் 466 பில்லியன் டாலரிலிருந்து 14 ஆக உயர்ந்துள்ளது
இந்தியாவின் ஏற்றுமதிகள் முந்தைய முறைகளைத் தாண்டி வளர்ச்சியடைந்துள்ளதாக நிதியமைச்சர் சீதாராமன் குறிப்பிட்டார் ஏற்றுமதிகள் இனி பாரம்பரிய பொருட்களுடன் மட்டுப்படுத்தப்படவில்லை அவை இப்போது உயர்நிலை தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகளையும் உள்ளடக்கியுள்ளன
