இஸ்ரேல்-ஈரான் இடையே கடுமையான மோதல்: மோடி அரசின் முயற்சியால் தாயகம் திரும்பிய இந்தியர்கள்!.

By : Bharathi Latha
இஸ்ரேல்-ஈரான் நாடுகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வரும் சூழலில் அந்த நாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வரும் வகையில் "ஆபரேஷன் சிந்து" நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இ தன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் நாட்டிலிருந்து ஜோர்டானுக்கு அழைத்து வரப்பட்ட இந்திய மக்கள் மற்றும் மாணவர்கள் என 165 பேர், இன்று காலை 08:45 மணியளவில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஐஏஎஃப் சி-17 விமானத்தில் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர். தில்லி விமான நிலையம் வந்தடைந்த அவர்களை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர். எல்.முருகன் உற்சாகத்துடன் வரவேற்றார்.
இதனிடையே இஸ்ரேல் நாட்டிலிருந்து மீட்கப்பட்டு எகிப்து நாட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் 248 பேர், இன்று காலை 11:00 மணியளவில், புதுதில்லி வந்தடைந்தனர். அவர்களை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர். எல்.முருகன் மூவண்ணக்கொடி வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றார். இஸ்ரேல் நாட்டிலிருந்து இதுவரை 594 இந்தியர்கள் ஆபரேஷன் சிந்து நடவடிக்கை மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
