Kathir News
Begin typing your search above and press return to search.

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவருக்கு அதிரடி காட்டிய என்.ஐ.ஏ!

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவருக்கு அதிரடி காட்டிய என்.ஐ.ஏ!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Jun 2025 10:08 AM IST

பஹல்காம். ஜூன் 23-பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கர வாதிகளுக்கு அடைக்க லம்கொடுத்ததாக 2 பேர் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் நேற்று சிக்கினர்.காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக் கில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதி கள் நடத்திய துப்பாக்கி சூட் டில் 26 பேர் பலியாகினர் இந்த சம்பவம் இந்தியா முழு வதும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடியாகஇந்திய ராணுவம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம் களை தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள், அவர்க ளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை பாது காப்பு படையினர் கைது செய்து வருகின்றனர்.


இந்தநிலையில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங் கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த 2 பேர் நேற்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளிடம் சிக்கினர் பிடிபட்ட 2 பேரும் பகுதி /பஹல்காம் பகுதியை சேர்ந்த பர்வேஸ் அகமது ஜோதர் மற் றும் பஷீர் அகமது ஜோதர் என்பதும், பாகிஸ்தானை தள மாக கொண்ட தடை செய் யப்பட்டலஷ்கர் இதொய்பா அமைப்புடன் தொடர்பு டைய 3பயங்கரவாதிகளுக்கு இவர்கள் தங்குமிட இவர்கள் நங்குமிடம், உணவு வழங்கியதாக என்.ஐ.ஏ அதி காரிகள் தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News