பிரகதி கூட்டம்:முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை காலக்கெடுவுடன் நிறைவேற்ற வேண்டும்,பிரதமர் மோடி வலியுறுத்தல்!

By : Sushmitha
இன்று ஜூன் 25 நடைபெற்ற 48வது பிரகதி கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிரதமர் மோடி சுரங்கம்,ரயில்வே மற்றும் நீர்வளத் துறைகளில் உள்ள சில முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆய்வு செய்தார் மேலும் நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்
பொருளாதார வளர்ச்சி மற்றும் பொது நலனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டங்கள் காலக்கெடு,நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் பிரச்சினை தீர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தி மதிப்பாய்வு செய்யப்பட்டதாக PMO அறிக்கை தெரிவிக்கிறது
இக்கூட்டத்தின் போது, காலக்கெடுவை கடைபிடிப்பது மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான பிரச்சினைகளைத் தீர்ப்பதன் அவசரத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார் தாமதங்கள் திட்ட செலவுகளை அதிகரிப்பது மட்டுமல்லாமல்,குடிமக்களுக்கு முக்கிய சேவைகளையும் இழக்கச் செய்யும் என்று எச்சரித்தார் இதனை தொடர்ந்து பிரதமர்-ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் மறுஆய்வின் போது,அனைத்து மாநிலங்களும் சுகாதார உள்கட்டமைப்பின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் குறிப்பாக தொலைதூர,பழங்குடி மற்றும் எல்லைப் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்
