ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தது சரிதான்: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

By : Sushmitha
சீனா தலைமையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது இந்தியாவின் சார்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட இருந்தால் கூட்ட அறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுத்தது இதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பயங்கரவாதத்தில் ஊக்குவிக்கும் பாகிஸ்தானை பாதுகாக்க சீனா பாரபட்சமாக நடந்து கொள்கிறது என தன் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் முடிவு சரி என்பதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தி விளக்கியுள்ளார் அதாவது இது மிக முக்கியமான விஷயம் என்பதால் சில விளக்கம் அளிக்க விரும்புகிறேன் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பயங்கரவாதத்தை எதிர்த்து போராடவே உருவாக்கப்பட்டது அதுவே அந்த அமைப்பின் முதன்மையான கொள்கை
அதன்படி நடைபெற்ற அந்த கூட்டத்தில் முக்கியமான குறிப்பு இல்லாத கூட்டு ஆவணத்தை ராஜ்நாத் ஆதரிக்க மறுத்தது சரிதான் பயங்கரவாதம் குறித்து குறிப்பிடாவிட்டால் நாங்கள் ஆவணத்தில் கையெழுத்திட மாட்டோம் என தெளிவாக அவர் கூறினார் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால் அடுத்த கட்டத்திற்கு செல்ல இயலாது என கூறியுள்ளார்
