என்.ஐ.பி.சி.சி.டி'க்கு சாவித்ரிபாய் புலே தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் என பெயர் மாற்றி கௌரவிப்பு!

என்ஐபிசிசிடி எனப்படுகின்ற தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தை மேம்பாட்டு நிறுவனமானது சாவித்ரிபாய் புலே தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
இந்த பெயர் மாற்றம் குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அன்னபூர்ணா தேவி தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தை மேம்பாட்டு நிறுவனத்திற்கு சாவித்ரிபாய் பூலே தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் என மறுபெயர் இடுவது இந்தியாவின் முன்னணி சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் மகளிர் மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் நமது உறுதிபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவது விதமாக இது அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
அதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா@2047 ஐ நோக்கிய நமது பயணத்தில் எந்த பெண்ணோ அல்லது குழந்தையோ பின் தங்கியிருக்கக் கூடாது என்பதை தாங்கள் உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்