மறுசீரமைக்கப்படும் ஜிஎஸ்டி:பலனடைய போகும் நடுத்தரவர்கள்!

ஜிஎஸ்டி விகிதங்களை நடுத்தர வர்க்கத்தினர் பலனடையும் வகையில் மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது அதாவது கடந்த மத்திய பட்ஜெட் அறிவிப்பில் வருமானவரிச் சலுகை வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து தற்பொழுது 12 சதவீத வரி அடுக்கை முற்றிலுமாக நீக்குதல் அல்லது தற்பொழுது 12 சதவீத வரி விதிப்பிற்கு ஆளாகும் பல பொருட்களை ஐந்து சதவீதத்திற்கு கீழ் வகைப்படுத்துதல் குறித்து மத்திய அரசு தீவிர பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது
இந்த மறுபரிசீலனை நடைமுறைக்கு வந்தால் நடுத்தர மக்கள் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு பெரிதும் பலன் அளிக்கும் அதிலும் குறிப்பாக பல்பொடி குடைகள் பிரஷர் குக்கர்கள் சமையலறை பாத்திரங்கள் சலவை இயந்திரங்கள் சைக்கிள்கள் 500 முதல் 1000 ரூபாய் விலை கொண்ட காலணிகள் ஆயிரம் ரூபாய் விலை கொண்ட ஆடைகள் தடுப்பூசிகள் விவசாயக் கருவிகள் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது என மத்திய அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது