இந்தியாவில் அடுத்த கட்ட வளர்ச்சி: மோடி அரசு எடுக்கும் மிகப்பெரிய நடவடிக்கை!

இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் பசுமை எஃகு, உயர் தர அலுமினியம் ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்கின்றன.இந்திய-ஐக்கிய அரபு அமீரகம் இடையே தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக மத்திய எஃகு அமைச்சர் எச்.டி. குமாரசாமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டௌக் அல் மரியைச் சந்தித்தார். இந்த சந்திப்பு எஃகு மற்றும் அலுமினியத்தில் வர்த்தக விரிவாக்கம், வள பாதுகாப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பில் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
இருதரப்பு தொழில்துறை உறவுகளை வலுப்படுத்தும் வாய்ப்பு குறித்து வரவேற்பு தெரிவித்த குமாரசாமி, உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராக இந்தியாவின் வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தார். பசுமை எஃகு உற்பத்தி மற்றும் நிலையான தொழில்துறை வளர்ச்சியில் இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் வலுவான கூட்டாளிகளாக இருக்க முடியும்" என்று அமைச்சர் கூறினார். "2030-ம் ஆண்டுக்குள் இந்தியா அதன் 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தி இலக்கை அடைய உதவுவதில் ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
குறிப்பாக மூலப்பொருள் பாதுகாப்பை ஆதரிப்பதன் மூலமும், எரிசக்தி திறன் கொண்ட உற்பத்தி அமைப்புகளை செயல்படுத்துவதன் மூலமும் இதை அடைய முடியும். இந்தியாவின் வளர்ந்து வரும் வாகன உதிரி பாகங்கள் மற்றும் உத்திசார்ந்த துறைகளுக்கு முக்கிய உயர் தர எஃகு மற்றும் அலுமினியத்தின் கூட்டு மேம்பாடு குறித்து விவாதத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.