டிரினிடாட் & டொபாகோ பிரதமருக்கு சரயு நதியிலிருந்து புனித நீரையும்,மஹாகும்பமேளாவின் புனித நீரையும் பரிசளித்த பிரதமர் மோடி!

அரசு முறை பயணமாக கரீபியன் நாட்டின் டிரினிடாட் & டொபாகோவிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் மற்ற முக்கிய அமைச்சர்கள் சிறப்பாக வரவேற்றனர் கிட்டத்தட்ட 1999 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு இந்திய பிரதமர் டிரினிடாட் & டொபாகோவிற்கு செல்வது இதுவே முதல்முறை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது
இதனைத் தொடர்ந்து டிரினிடாட் & டொபாகோவிற்கு பிரதமர் அளித்த இரவு விருந்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ராமர் மந்திரின் பிரதியையும்,சரயு நதியிலிருந்து புனித நீரையும்,பிரயாக்ராஜில் நடைபெற்ற மஹாகும்பமேளாவின் புனித நீரையும் பரிசாக வழங்கியுள்ளார் இந்த பரிசு இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஆழமான கலாச்சார மற்றும் ஆன்மீகப் பிணைப்புகளை அடையாளப்படுத்துகிறது என பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்
மேலும் டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரை சந்தித்த பிரதமர் டிரினிடாட் & டொபாகோ வாழ் இந்திய வம்சாவளியின் ஆறாவது தலைமுறையினருக்கு OCI அட்டைகள் என்ற சிறப்பு விசா வழங்குவது என்ற முடிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் இதன் மூலம் இந்தியாவுடனான அவர்களின் தொடர்பை வலுப்படுத்தும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்