சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு குட் நியூஸ் கொடுத்த ரிசர்வ் வங்கி:வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடை!

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய அறிவிப்பு சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு நல்ல மகிழ்ச்சி செய்தியை கொடுத்துள்ளது அதாவது தனிநபர்கள் சிறு தொழில் நிறுவனங்கள் பெறும் கடனின் அசல் தொகையை முன்கூட்டியே செலுத்தினால் கட்டணம் வசூலிக்க கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது
இந்த சலுகை புளோட்டிங் ரேட் எனப்படுகின்ற மாறும் வட்டி முறையில் கடன் பெற்றிருந்தாலும் பொருந்தும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது அதுமட்டுமின்றி வருகின்ற 2026 ஜனவரி 1 முதல் வழங்கப்படுகின்ற கடன்கள் மற்றும் புதுப்பிக்கப்படும் கடன்களுக்கு இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பொதுத்துறை வங்கிகள் வணிக வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் வங்கி இல்லாத நிதி நிறுவனங்கள் நிதி நிறுவனங்கள் என அனைத்திற்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும் கடன் பெற்ற நாளிலிருந்து லாக் இன் பீரியட் எனப்படுகின்ற எந்த குறிப்பிட்ட கால கட்டுப்பாடு இல்லாமல் இந்த சலுகை வாடிக்கையாளர்களை சாறும் என்றும் வங்கியே குறிப்பிட்ட அளவு கடனை அடைக்க அழைப்பு விடுக்கும் பொழுதும் கட்டணம் ஏதும் வசூலிக்க கூடாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
இந்த புதிய சலுகை மற்றும் உத்தரவாள் கடனை திருப்பி செலுத்துவதிலும் வேறொரு இடத்திற்கு மாற்றிக் கொள்வதிலும் வாடிக்கையாளர்கள் தயக்கமின்றி முடிவெடுக்க முடியும் என்றும் கடன் வாங்குபவர்களை இந்த நடவடிக்கை பாதுகாப்பதற்கும் நியாயமான கடனை உறுதி செய்வதாக சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது