திருக்குறளின் பெருமையை கரீபியன் தீவு நாட்டில் நிலைநாட்டிய பிரதமர்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் கரீபியன் தீவு நாடான ட்ரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அங்கு அவர் அந்நாட்டுப் பிரதமர் கமலா பிரிசத் பிஸ்சர் அவர்கள் மற்றும் ஜனாதிபதி திருமதி. கிறிஸ்டைன் கார்லா கங்காலு அவர்களைச் சந்தித்தார் இருவரும் இந்திய வம்சாவழியினர் என்பதும் அதிலும் ஜனாதிபதி கிறிஸ்டைன் கங்காலு அவர்களின் பூர்விகம் தமிழகம் என்பதும் குறிப்பிடத்தக்கது
ட்ரினிடாட் டொபாகோ நாட்டின் மிக உயரிய தேசிய விருதான 'தி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப் ட்ரினிடாட் அண்ட் டொபாகோ' விருதைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி அந்நாட்டின் நாடாளுமன்ற அவையில் உரையாற்றினார் அப்போது,அவர் ஜனாதிபதி திருமதி. கங்காலுவின் மூதாதையர்கள் திருவள்ளுவர் பிறந்த பூமியான தமிழ்நாட்டைச் சார்ந்தோர் என்று குறிப்பிட்டார்
மேலும்,ஒரு நாட்டிற்குத் தேவையான ஆறு முக்கியமான விஷயங்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் எழுதியுள்ளார் என்று திருக்குறளை மேற்கோள் காட்டினார் பிரதமர்.
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
எனும் திருக்குறளைக் குறிப்பிட்டு வீரமிக்க படை,நாட்டுப்பற்று மிக்க மக்கள்,குறையாத செல்வம்,நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், அழிக்கமுடியாத இராணுவம்,மேலும் துன்பத்தில் உதவும் அண்டை நாட்டு நட்பு ஆகிய 6 முக்கியக் கூறுகளை வலிமையான நாடுகள் தங்களிடம் வைத்திருக்க வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறியது போல ட்ரினிடாட் மற்றும் டொபாகோ எந்தவொரு ஆபத்திலும் உதவும் நட்பு நாடு என்றும் குறிப்பிட்டார்
இவ்வாறு,திருக்குறளின் பெருமையை அந்நிய மண்ணில் மிகச்சிறப்பாக எடுத்துரைத்து, தமிழின் பெருமையையும் தமிழர்களின் சிறப்பையும் நிலைநாட்டியுள்ளார் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் என தெரிவித்துள்ளார்