பெண்களுக்கு உரிமை வழங்குவது கடமை அல்ல, அது வளர்ச்சிக்கான விதை: அறிந்து செயல்படும் மோடி அரசு!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சாவித்ரிபாய் பூலே தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் புதிய மையத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அன்னபூர்ணா தேவி திறந்து வைத்தார். தொடக்க விழாவில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டை மேம்படுத்துவதில் இந்த மையத்தின் முக்கிய பங்களிப்பை எடுத்துரைத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்காக பணியாற்றுவது வெறும் நிர்வாகக் கடமை மட்டுமல்ல, தேசத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றும் நடவடிக்கை என்றும் அவர் கூறினார். ஒரு பெண் அதிகாரம் பெறும்போது, குடும்பம் அதிகாரம் பெறுகிறது என்றும், ஒரு குழந்தை சிறப்பான முறையில் வளர்க்கப்படும் போது, முழு சமூகமும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த செய்தியை ராஞ்சி மைய பயிற்சியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் எடுத்துச் செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் இணையமைச்சர் திருமதி. சாவித்ரி தாக்கூர், சாவித்ரிபாய் புலே கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இந்த புதிய மையம் கல்வி மற்றும் பயிற்சிக்கான மையமாக மட்டுமல்லாமல், புதுமை, ஆராய்ச்சி மற்றும் கொள்கை வகுப்பிற்கான மையமாகவும் உருவாகும் என்று கூறினார்.