பிரதமரின் பிரேசில் பயணம் இரு நாடுகளுக்கும் இடையே புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது!

By : Sushmitha
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரேசில் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது மேலும் பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக்கி உள்ளது அவை
1 சர்வதேச பயங்கரவாதம் மற்றும் எல்லை கடந்த திட்டமிடப்பட்ட குற்றங்களை எதிர்கொள்வது குறித்த ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்
2 டிஜிட்டல் மாற்றத்தில் வெற்றிகரமான பெரிய அளவிலான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒத்துழைப்பில் ஒப்பந்தம்
3 புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்
4 பிரேசில் வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் இடையே வேளாண் ஆராய்ச்சிக்கான ஒப்பந்தம்
5 வகைப்படுத்தப்பட்ட தகவல்களின் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர பாதுகாப்புக்கான ஒப்பந்தம்
6 இந்தியாவின் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை மற்றும் பிரேசிலின் வர்த்தகம், தொழில்துறை மேம்பாட்டு கழகத்தின் போட்டித்திறன் மற்றும் ஒழுங்குமுறை கொள்கை செயலகம் ஆகியவற்றுக்கு இடையே அறிவுசார் சொத்துரிமைத் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் என ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக்கி உள்ளது மேலும் வர்த்தகம் வணிகம் மற்றும் முதலீட்டைக் கண்காணிப்பதற்கான அமைச்சக நிலையிலான அமைப்பை நிறுவவும் முடிவு செய்திருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது
