புதிய ரக கரும்பு உற்பத்தி நிறுவனம்: பழங்குடியின கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி!

By : Bharathi Latha
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின கரும்பு விவசாயிகளுக்காக 2025 ஜூலை 9 அன்று ‘வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி’ என்ற தலைப்பில் புதிய ரக கரும்பு உற்பத்தி நிறுவனம் கோயம்புத்தூரில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. வானொலி வேளாண்மைப் பள்ளி பங்கேற்பாளர்களுக்கான ‘விவசாயிகள்-விஞ்ஞானிகள்’ கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பழமையான பயிர் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான கரும்பு உற்பத்தி நிறுவனமானது, பழங்குடியினரின் நலனுக்காக 'பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தினை’ தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் காப்பகம் , சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ,சேலம் மாவட்டத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலை கிராமங்கள் மற்றும் கேரளாவின் அட்டப்பாடி மலைகளில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
பயிற்சி அமர்வுகள், விவசாயிகள்-விஞ்ஞானிகள் கலந்துரையாடல் தவிர, விவசாயிகள், கரும்பு வயல்கள், பண்ணை இயந்திரங்கள் ,கரும்பு சார்- ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை மற்றும் நிறுவன அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். ‘வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி' என்ற தமிழ்ப் புத்தகமும், பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தின் வெற்றிக்கதை குறித்த வீடியோ ஆவணப்படமும் இந்த நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட உள்ளன.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின கரும்பு விவசாயிகள் மற்றும் வானொலி வேளாண்மைப் பள்ளியின் பதிவு செய்த பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியை நீலகிரி வரையாடு திட்ட இயக்குநர் திரு எம் ஜி கணேசன் தொடங்கி வைக்கிறார்.
