தற்சார்புடன் சீனாவிற்கு சவால்விடும் இந்திய கடற்படை:நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்!

By : Sushmitha
தொடர்ச்சியாக இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது இதனை தகர்த்தி பாதுகாப்பை வலுப்படுத்த இந்திய கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து கடலுக்குள்ளே அழிக்கும் திறன் கொண்ட ஆயுதத்தை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
அதிலும் குறிப்பாக உள்நாட்டிலே அந்த ஆயுதங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அந்த முயற்சியில் தற்பொழுது வெற்றியை எட்டி உள்ள இந்த அமைப்பு தொலைவிலுள்ள இலக்குகளையும் குறிவைத்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர் மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் அமைப்பை வடிவமைத்துள்ளது
இந்த வடிவமைப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையும் வெற்றி அடைந்துள்ளதால் இந்த மாபெரும் வெற்றிக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்ததோடு இந்த ராக்கெட் அமைப்பின் வெற்றி இந்திய கடற்படையின் தாக்குதல் திறனை பன்மடங்கு அதிகரிக்கும் என கூறியுள்ளார்
