Kathir News
Begin typing your search above and press return to search.

தேசிய கல்விக் கொள்கையினால் நடந்த மாற்றம்: வளர்ச்சி நோக்கிய பயணத்தில் இந்தியா!

தேசிய கல்விக் கொள்கையினால் நடந்த மாற்றம்: வளர்ச்சி நோக்கிய பயணத்தில் இந்தியா!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 July 2025 9:32 PM IST

மத்திய பல்கலைக்கழகங்களின் இரண்டு நாள் துணைவேந்தர்கள் மாநாடு குஜராத்தின் கெவாடியாவில் தொடங்கியது. முன்னணி உயர்கல்வி நிறுவனங்களின் 50க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் இதில் பங்கேற்றனர், இதில் தேசிய கல்விக் கொள்கை – 2020, தொடங்கப் பட்டதிலிருந்து அதன் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்யவும், மதிப்பிடவும், உத்திகளை வகுக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. குஜராத் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைந்து கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டம், வளர்ச்சியடைந்த பாரதம்- 2047 -ன் தொலைநோக்குப் பார்வையை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த நிகழ்வில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் உயர்கல்வி சூழல் அமைப்பு ஒரு அடிப்படை மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது‌. இது நெகிழ்வான, துறைகளுக்கு இடையேயான, உள்ளடக்கிய மற்றும் புதுமை சார்ந்ததாக கல்வியை மாற்றுகிறது என்றார். இதன் விளைவாக, மொத்த மாணவர் சேர்க்கை 4.46 கோடியைத் தொட்டுள்ளதாகவும், 2014–15 முதல் இது 30% அதிகரித்துள்ளதாகவும், மாணவிகள் சேர்க்கை 38% அதிகரித்துள்ளதாகவும், பெண்களின் சேர்க்கை விகிதம் இப்போது ஆண்களின் விகிதத்தை விட அதிகமாக இருப்பதாகவும், பிஎச்டி. சேர்க்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். பெண் பி.எச்டி ஆய்வாளர்கள் எண்ணிக்கை 136% அதிகரித்துள்ளதாகவும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான சேர்க்கை சதவீதப் புள்ளிகள் அதிகரித்து உள்ளதாகவும் பிரதான் குறிப்பிட்டார். அனைவரையும் உள்ளடக்கிய கல்வி மற்றும் சமூக நீதிக்கான அரசின் உறுதிப்பாட்டை இது குறிக்கிறது. நேர்மறையான கொள்கை முயற்சிகளின் விளைவாக, 1,200+ பல்கலைக்கழகங்களும் 46,000 க்கும் மேற்பட்ட கல்லூரிகளும் நிறுவப்பட்டுள்ளன, இதன் மூலம் இந்தியா உலகளவில் மிகப்பெரிய கல்வி அமைப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய கல்விக் கொள்கையின் ஐந்து சங்கல்பங்கள் என்ற கருத்தை எடுத்துரைத்த அமைச்சர், இது அவர்களின் பல்கலைக்கழக குருகுலங்களில் துணை வேந்தர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும் என்றார். அடுத்த தலைமுறைக்கான வளர்ந்து வரும் கல்வி, பலதுறை கல்வி, புதுமையான கல்வி, முழுமையான கல்வி மற்றும் பாரதிய கல்வி ஆகியவை முக்கிய கருப்பொருள்களாக உள்ளன. கடந்த காலத்தைக் கொண்டாடுதல் (இந்தியாவின் செழுமை), நிகழ்காலத்தை அளவீடு செய்தல் (இந்தியாவின் கதையாடலைத் திருத்தல்) மற்றும் எதிர்காலத்தை உருவாக்குதல் (உலகளாவிய ஒழுங்கில் இந்தியாவின் பங்கு) ஆகிய நோக்கங்களின் மூலம் கல்வித் துறையில் திரிவேணி சங்கமத்தின் நோக்கங்களை செயல்படுத்த தேவையான மாற்றங்களை வகுக்குமாறு துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுத்தார். இது கடந்த காலத்தைப் புரிந்துகொள்வது, நிகழ்காலத்தைக் கண்டறிதல் மற்றும் சமகால கட்டமைப்பில் எதிர்காலத்தை வெளிப்படுத்துதல் ஆகியவற்றை உறுதி செய்யும் என அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News