பிரதமரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த பஞ்சாப் முதல்வர்: மத்திய அரசு கொடுத்த வார்னிங்!

By : Bharathi Latha
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை கேலி செய்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவற்றை பொறுப்பற்றவை, வருந்தத்தக்கவை என்று விமர்சித்து இருந்தார்.
கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கேலி செய்திருந்தார். இது குறித்த அவர் கூறும் போது, "பிரதமர் எங்கோ சென்றுவிட்டார். அது கானா என்று நினைக்கிறேன். அவர் திரும்பி வரப் போகிறார், அவர் வரவேற்கப்படுகிறார். அவர் எந்த நாடுகளுக்குச் செல்கிறார் என்பது கடவுளுக்குத் தெரியும். 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் அவர் தங்கவில்லை.
10,000 மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு அவர் பயணம் செய்கிறார், அங்கு அவருக்கு 'மிக உயர்ந்த விருதுகள்' கிடைக்கின்றன. இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்நிலையில், மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை கேலி செய்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
