கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ் மறைவு: ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி!

By : Bharathi Latha
ஸ்ரீ கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ், அவரது திரைத் துறைத் திறமைக்காகவும் பல்துறைத் திறனுக்காகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். அவர் தமது அற்புதமான நடிப்பால் தலைமுறை தலைமுறையாக ரசிகர்களை கவர்ந்தார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். சமூக சேவையிலும் கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ் முன்னணியில் இருந்தார் எனவும் ஏழைகள், நலிந்தவர்கள் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கப் பாடுபட்டார் என்றும் நரேந்திர மோடி மேலும் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறும் போது, "மரியாதைக்குரிய கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ் மறைவால் வேதனை அடைந்தேன். அவரது திரைத் துறைத் திறமைக்காகவும் பல்துறைத்திறனுக்காகவும் அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவர் தமது அற்புதமான நடிப்பால் தலைமுறை தலைமுறையாக ரசிகர்களைக் கவர்ந்தார். அவர் சமூக சேவையிலும் முன்னணியில் இருந்தார். ஏழைகள், நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிக்க பாடுபட்டார். அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி" என பதிவிட்டு இருக்கிறார்.
