Kathir News
Begin typing your search above and press return to search.

சமோசா,ஜிலேபி பிரியர்கள் கவனத்திற்கு!எச்சரிக்கை விடுத்த மத்திய சுகாதாரத்துறை!

சமோசா,ஜிலேபி பிரியர்கள் கவனத்திற்கு!எச்சரிக்கை விடுத்த மத்திய சுகாதாரத்துறை!
X

SushmithaBy : Sushmitha

  |  15 July 2025 9:42 PM IST

இந்தியாவில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது 2050 ஆம் ஆண்டிற்குள் உடல் எடை அதிகரித்து உடல் பருமனாக இருப்பவர்களின் எண்ணிக்கை 44.9 கோடிக்கும் அதிகமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது

உடல் செயல்பாடு இல்லாமல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான உணவு வகைகளால் குழந்தைகளும் உடல் பருமன் அதிகரித்து காணப்படுகின்றனர் இதனால் அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும் உணவு பொருட்களில் இருக்கும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளை பட்டியலிட்டு பலகை வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

இந்த பட்டியலில் நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் அன்றாட சிற்றுண்டி உணவில் எவ்வளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை இருக்கிறது என்பதும் இடம்பெற்றுள்ளது அதன்படி சமோசா ஜிலேபி போன்ற உணவுப் பொருட்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகைகள் ஆனால் இவை இரண்டுமே உடலுக்கு மிகவும் தீங்கானது அதனால் சமோசா ஜிலேபி ஆகியவை விரைவில் சுகாதார எச்சரிக்கை பட்டியலில் சேரலாம் என கூறப்படுகிறது

அதாவது சிகரெட் எடுத்துக் கண்டால் ஏற்படும் ஆபத்தை விளக்கும் எச்சரிக்கை வாசகம் அதன் பாக்கெட்டுகளில் இருப்பது போன்று சமோசா ஜிலேபி விற்கப்படுகின்ற பாக்கெட்டுகளில் உள்ள லேபிள்களில் சமோசா ஜிலேபி உட்கொண்டால் ஏற்படும் பாதிப்பை எச்சரிக்கை வாசகமாக இடம்பெறச் செய்ய உள்ளதாக இந்திய இதயவியல் சங்கத்தின் நாக்பூர் பகுதி தலைவர் அமர் அமலே தெரிவித்துள்ளார்

ஆனால் சிகரெட் வரிசையில் சமோசா மற்றும் ஜிலேபி போன்றவற்றிற்கு எச்சரிக்கை வாசகம் வர உள்ளதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது மேலும் எந்த உணவையும் குறிப்பிட்டு எச்சரிக்கை செய்ய திட்டமிடப்படவில்லை என்றும் உடல் பருமனை குறைக்க எண்ணெய் சர்கரை அளவு தொடர்பாகதான் எச்சரிக்கை வாசகம் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News