Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் ஐந்து இடங்களில் அமைய உள்ள தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள்:பெருகப் போகும் வேலைவாய்ப்பு!

தமிழகத்தில் ஐந்து இடங்களில் அமைய உள்ள தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள்:பெருகப் போகும் வேலைவாய்ப்பு!
X

SushmithaBy : Sushmitha

  |  24 July 2025 6:43 PM IST

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனத்தின் இயக்குநர் கே முரளி தெரிவித்துள்ளார் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் ஜூலை 23 இல் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்

மேலும் பத்தாவது பன்னிரண்டாம் வகுப்பு டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தனித்தனியாக நடைபெறும் என்றும் இவற்றில் 18 வயதிலிருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம் என்றும் கடந்த ஆண்டு பயிற்சி முடித்தவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்


தொடர்ந்து பேசிய இயக்குனர் முரளி ஒவ்வொரு ஆண்டும் 250 முதல் 300 பேர் வரை இந்நிறுவனத்தில் பயிற்சி பெறுகின்றனர் தற்போதைய தேவை 10 மடங்கு அதிகமாக உள்ளதால் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும்

திண்டிவனம் உளுந்தூர்பேட்டை ஜெயங்கொண்டம் புதுக்கோட்டை கரூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தோல் அல்லாத காலணிகள் தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன என்றும் நைக் பூமா அடிடாஸ் மற்றும் ஸ்கெச்சர்ஸ் போன்ற உலகளாவிய பிராண்டுகள் தென்னிந்தியாவில் உற்பத்தி அலகுகளை அமைப்பதால் தமிழ்நாட்டிற்கு மட்டும் 2025-26 மற்றும் 2026-27 நிதியாண்டில் காலணித் துறையில் சுமார் 1,35,000 திறமையான தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் முரளி கூறியுள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News