மனதின் குரல் நிகழ்ச்சி:தஞ்சாவூரைச் சேர்ந்த மணிமாறனை குறிப்பிட்டு பாராட்டிய பிரதமர் மோடி!

By : Sushmitha
பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் ஓலைச்சுவடிகளை பாதுகாக்க வேண்டி நமது அரசு ஞான பாரத இயக்கம் என்ற அமைப்பை முன்னெடுத்துள்ளது. இந்த அமைப்பானது நமது பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கின்ற பணிகளை மேற்கொள்கிறதாக தெரிவித்துள்ளார் மேலும் தஞ்சாவூரைச் சேர்ந்த மணிமாறன் என்பவரையும் குறிப்பிட்டு பேசியுள்ளார்
அந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது பல நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகள் வடிவில் பாதுகாக்கப்பட்ட ஞானம் தான் நமது மெய்யான சக்தியாகும் அவற்றை முறையாக பாதுகாப்பது என்பது நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பொறுப்பாகிறது அவ்வகையில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் இந்தப் பணியை தங்களது சாதனையாகவே சிலர் செய்து வந்துள்ளார்கள்
இப்படிப்பட்ட கருத்தூக்கம் அளிக்கும் ஆளுமைகளில் ஒருவர் தான் தஞ்சாவூரைச் சேர்ந்த மணிமாறன் அவர்கள் இன்றைய தலைமுறையினர் ஓலைச்சுவடிகளை படிக்க கற்றுக்கொள்ளவில்லை என்றால் இதுபோன்ற செல்வத்தை இழக்க நேரிடும் என்று கருதிய மணிமாறன் அவர்கள் இந்த ஓலைச்சுவடிகளை பராமரிக்கும் பணிகளை துவங்கினார் ஓலைச்சுவடிகளை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் பணிகளையும் மேற்கொண்டார் இதில் சில மாணவர்கள் ஓலைச்சுவடிகளை பயன்படுத்தி பாரம்பரிய மருத்துவ முறைகளை கண்டறிந்துள்ளனர்
இதுபோன்ற பாரம்பரிய முறைகளை பாதுகாக்க வேண்டி நமது அரசு ஞான பாரத இயக்கம் என்ற அமைப்பை முன்னெடுத்துள்ளது. இந்த அமைப்பானது நமது பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கின்ற பணிகளை மேற்கொள்கிறதாக தெரிவித்துள்ளார்
