கங்கைகொண்ட சோழபுரம்: பிரதமர் மோடி வருகைக்கு பின் உயரும் மவுசு!

By : Bharathi Latha
தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். ராஜ ராஜ சோழனின் புனித பூமியில் தெய்வீக சிவ தரிசனம் மூலம் அனுபவித்த ஆழ்ந்த ஆன்மீக ஆற்றலைப் பற்றி உணர்ந்து, சர்வவல்லமையுள்ள சிவபெருமானை வணங்கியதாக பிரதமர் கூறினார். இளையராஜாவின் இசையுடனும், ஓதுவார்களின் புனித மந்திரங்களுடனும், ஆன்மீக சூழல் ஆன்மாவை ஆழமாக நெகிழச் செய்ததாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
புனித ஆடி மாதத்தின் முக்கியத்துவத்தையும், பிரகதீஸ்வரர் சிவன் கோயில் கட்டப்பட்டு 1,000 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வையும் குறிப்பிட்ட நரேந்திர மோடி, இத்தகைய சிறப்பான தருணத்தில் பிரகதீஸ்வரரின் பாதத்தில் அமர்ந்து வழிபாடு செய்வது தமக்கு கிடைத்த நல்வாய்ப்பு என அவர் கூறினார். 140 கோடி இந்தியர்களின் நலனுக்காகவும், நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகதீஸ்வரர் சிவன் ஆலயத்தில் வழிபாடு செய்ததாகக் கூறிய அவர், சிவபெருமானின் ஆசீர்வாதங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.
மத்திய கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, 1000 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் கண்காட்சியைப் பார்வையிடுமாறு நரேந்திர மோடி மக்களைக் கேட்டுக் கொண்டார். சின்மயா மிஷனால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் கீதை தொகுப்பின் வெளியீட்டு விழாவிலும் அவர் கலந்து கொண்டார். இந்த முயற்சி நாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான உறுதியை ஊக்குவிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சியுடன் தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
