முத்துமலை முருகன் கோவில்: கட்டாய வாகன வசூல்... இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

By : Bharathi Latha
பிரசித்தி பெற்ற சேலம் மாவட்டத்தின் முத்து மழை முருகன் கோவிலில் சட்டவிரோதமாக வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிப்பதாக தகவல் வெளியாகியது. இது தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பினர் இதை உறுதி செய்து இருக்கிறார்கள். கோவிலில் சட்டவிரதமாக கட்டாய வாகன கட்டணம் தடை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் மாபெரும் கண்டனமும் தற்போது நடத்தப்பட்டு இருக்கிறது.
மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது பற்றி தெளிவான விளக்கத்தை அளித்து இருக்கிறார். ஏத்தாப்பூர் பேரூராட்சி கண்டித்து, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன் அவர்கள், இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
