Begin typing your search above and press return to search.
சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை: காரணம் என்ன?

By : Bharathi Latha
திருவள்ளூரை சேர்ந்த திவ்யா என்ற மாணவி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். டி.பி. சத்திரம் பகுதியில் அறை எடுத்து தங்கி படித்து வந்த நிலையில் அவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உடல் கூராய்வுக்காக, திவ்யா உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பணிச்சுமை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை குற்றம்சாட்டி உள்ளார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி கல்லூரி மாணவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story
