மனிதனை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்: வந்திருக்கும் புது அப்டேட்!

By : Bharathi Latha
மனிதனை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் எட்டப்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்தும் இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்தும் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விரிவாக எடுத்துரைத்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்துள்ள பதிலில் மனிதர்களை சுமந்து செல்லும் வாகன வடிவமைப்பிற்கான தரை சோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த செலுத்து வாகனத்தில் உள்ள உந்துவிசைக்கான அமைப்புகள் வடிவமைக்கப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் பரிசோதிக்கப் பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். செலுத்து வாகனம் விண்ணில் செல்லும்போது வாகனத்தில் ஏதேனும் பழுது ஏற்படும் பட்சத்தில் அதிலுள்ள விமானிகள் தப்பிச்செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 5 வகையான இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த நிலையான பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
ககன்யான் விண்கலத்தில் நிறுவப்படவுள்ள பல்வேறு கருவிகள், கட்டுப்பாட்டு அமைப்புகள் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ககன்யாண் திட்டத்தின் பல்வேறு கட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான காலவரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி இரண்டாவது சோதனை வாகனப் பயணம் 2025-ம் ஆண்டின் 3-வது காலாண்டில் மேற்கொள்ளப்படும்.
