இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி நியாயமற்றது: மத்திய அரசு கண்டனம்!

By : Bharathi Latha
இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கொள்முதல் செய்யும் காரணத்திற்காக இந்தியா மீதான வரியை தான் உயர்த்துவதாக டிரம்ப் அறிவித்தார். அதன் விளைவாக 25 சதவீதத்திலிருந்து தற்போது 50% ஆக வரியை அதிகபட்சமாக உயர்த்தி இருக்கிறார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா மீதான இந்த வரி நியாயமற்றது 'என குறிப்பிட்டு உள்ளது.
மேலும் அதில்,'ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் எங்கள் நிலைப் பாட்டை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கிறோம். அதாவது சந்தை காரணிகள் சார்ந்தும்,140 கோடி இந்திய மக்களுக்கு எரிசக்தி பாது காப்பை உறுதி செய்யும் நோக் கிலும் இந்த இறக்குமதி செய்யப்படுகிறது' என்றும் கூறப்பட்டு இருந்தது.
பல நாடுகள் தங்கள் சொந்த தேசிய நலனுக்காக எடுக்கும் நடவடிக்கைகளுக்காக, இந் |தியா மீது கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது. இதற்கிடையே டிரம்பின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என காங்கிரஸ் கட்சியும் சாடியுள் ளது. எனவே நாட்டின் வெளியுறவு கொள்கையில் விரிவான மறுசீரமைப்பு அவசியம் என்றும் கூறியுள்ளது
