சமபந்தி விருந்து நடத்துவது பெரும் அவமானம்: ஏன் என்று விளக்குகிறார்? எழுத்தாளர் சோ.தர்மன்!

By : Bharathi Latha
'சமபந்தி விருந்து நடத்துவது பட்டியலினத்தவ ருக்கு பெரும் அவமானம்' என, 'சாகித்ய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறும் போது, "ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள பெரிய கோவில்களில், 'சமபந்தி விருந்து' என்ற ஒன்றை நடத்துகின்றனர். இதற்கு அரசு பணம் ஒதுக்குகிறது. அதாவது, ஏதாவது ஒரு மண்டபத்தில், அரசின் செலவில் சமையல் செய்து விருந்து வைக்கின்றனர், ஊடகங்களில் விளம்பரப் படுத்துகின்றனர்.
மறுநாள், 'சமபந்தி விருந்தில் அனைத்து ஜாதியினரும் சரிசமமாக அமர்ந்து விருந்து உண்டனர் என, செய்தி வரும். ஒரு காலத்தில் பட்டியலினத்தவர்கள், தீண்டத்தகாதவர்களாக இருந்தனர்; மற்றவர்களு டன் சரிசமமாக அமர்ந்து, உணவருந்தும் உரிமை என்பதை நினைவூட்டு மறுக்கப் பட்டிருந்ததுவதே, சமபந்தி விருந்தின் நோக்கம்.
'தீண்டாமை சமூகத் அனைவரும் சமமாகவதில் இருந்து வரும்' என்ற கருத்தை சமூகத்துக்கு விதைக்கவே அப்படியொரு ஏற்பாடு இருந்தது. ஆனால், இன்றைக்கும் அதை கடைப்பிடிப்பது எத்தனை பெரிய அவமானம்? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். இன்றைய காலகட்டங்களிலும் இந்த முறையை கடைப்பிடிப்பது சரியாக இருக்காது வெறும் பொய்யான தேடல்களுக்காக இவற்றை தற்போது நடத்தி வருகிறார்கள் என்று கூறுகிறார்.
