வீடுகளில் நாய் வளர்க்கும் உரிமையாளர் கவனத்திற்கு.. சென்னை மாநகராட்சி கொடுத்த புது அப்டேட்!

By : Bharathi Latha
சென்னையில் வீடுகளில் நாய் வளர்ப்போர் மாநகராட்சியிடம் உரிமம் பெறுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாட்டின்படி, உரிமம் இல்லாமல் நாய் வளர்ப்பது குற்றமாகக் கருதப்படும், மேலும் அபராதமும் விதிக்கப்படும். பொது இடங்களில் நாய்களை அழைத்துச் செல்லும்போது, உரிமம் மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.
மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நாய்களை வளர்க்கவோ அல்லது பொது இடங்களில் விடவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நாய் கடியால் ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, நாய் உரிமையாளர்கள் அனைவரும் மாநகராட்சியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தங்கள் நாய்களுக்கு உரிமம் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
