Kathir News
Begin typing your search above and press return to search.

பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த சர்ச்சை... எதிர்க்கட்சிக்கு பலமான கேள்வியை முன்வைத்த தேர்தல் ஆணையம்!

பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த சர்ச்சை... எதிர்க்கட்சிக்கு பலமான கேள்வியை முன்வைத்த தேர்தல் ஆணையம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Aug 2025 10:19 PM IST

பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து ஆகஸ்ட் 21 காலை 11.00 மணி வரை எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை, ஒரு உரிமை கோரல் கூட வரவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் 2025 ஆகஸ்ட் 21 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு 1,60,813 வாக்குச் சாவடி நிலையிலான முகவர்கள் உள்ளனர் என்றும் இவர்கள் மூலமாக எந்த உரிமை கோரலோ, ஆட்சேபமோ கிடைக்கப்பெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


நேரடியாக 70,895 உரிமை கோரல் அல்லது ஆட்சேபம் பெறப்பட்டன. இவற்றில் 3,449 நேர்வுகள் 7 நாட்களுக்கு பின் பைசல் செய்யப்பட்டன. 18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் இருந்து 2,28,793 படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், விதிமுறைகளின்படி 7 நாட்கள் நிறைவடைந்த பின் இது குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மூலம் முடிவெடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2025 ஆகஸ்ட் 01 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் நகல் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாத காரணங்கள் தெரிவித்து அந்தப் பட்டியல் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் தேடும் வகையில் தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களின், இணையதளங்களில் (மாவட்ட வாரியாக) வெளியிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களின் உரிமை கோரல்களை ஆதார் அட்டை நகலுடன் சமர்ப்பிக்கலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News