மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்களை மீட்க வழக்கு!!உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!!

By : G Pradeep
சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சமீபத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் அதனை மீட்டு முறையாக பராமரித்து கோவிலை புனரமைப்பு வேலைகளை முடித்து விரைவில் குடமுழுக்கு செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் அனிதா சுமந்த், குமரப்பன் போன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. மனுவில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 1200 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் அது முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது என கூறப்பட்டிருந்தது.
ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில் அனைத்து கோவில்களுக்கும் உரிய சொத்துக்களை மீட்டு முறையாக பராமரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் இதுபோன்று பராமரிக்கப்படாமல் இருப்பது குறித்த வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிபதிகள் இது குறித்து அரசு தரப்பினர்களுக்கிடையே கேள்விகளை அனுப்பப்பட்டதை தொடர்ந்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை வரும் செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
