பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா வணிகத்திற்காக இந்தியாவை உதரிய டிரம்ப்!! எதிராக தோன்றிய குற்றச்சாட்டு!!

By : G Pradeep
அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகராகவும், வழக்கறிஞராகவும் இருந்த ஜேக் சலிவன் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் அமெரிக்க அதிபரான டிரம்ப் மற்றும் அவருடைய குடும்பத்தார் பாகிஸ்தானுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள வணிகம் குறித்து பேசியுள்ளார்.
மேலும் இது அமெரிக்கா தனக்கு தானே வைத்துக் கொண்ட தீங்கு என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்காவின் இரண்டு கட்சிகளும் உழைத்திருப்பதாக சுட்டிக்காட்டிய ஜேக் இந்தியாவின் தொழில் நுட்பம் திறமை போன்றவை அமெரிக்காவின் கருத்துக்களோடு ஒத்தி இருப்பவையாகவும், சீன நாட்டின் அச்சுறுத்தலில் இருந்து மீண்டு வருவதற்கு இந்தியாவுடன் சேர்ந்து பயணிக்க வேண்டி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் தற்பொழுது டிரம்ப் பாகிஸ்தானுடன் வணிக ஒப்பந்தங்களை செய்ய விரும்புவதாக கூறியிருப்பது இந்தியா உடனான உறவை துண்டிப்பது போன்று தோன்றுகிறது என கூறியுள்ளார். இது போன்ற செயல் அமெரிக்கா தனக்கு தானே வைத்துக் கொள்ளும் மிகப்பெரிய ஆப்பு!! என்றும் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் உறவு மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.
இதை பார்க்கும் பொழுது அமெரிக்காவுடன் திற நாடுகளுக்கு இருக்கும் நட்பும் பாதிக்கப்படும் என்றும், இந்தியா மீது அதிகப்படியான வரி விதிப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்தியதை மீண்டும் கூறி வருவது போன்றவற்றை குறித்து பேட்டியில் கூறியுள்ளார்.
