அலட்சியப்படுத்தப்படும் தூய்மை பணியாளர்கள்!! குப்பை மேடாகும் சென்னை!!

By : G Pradeep
துப்புரவு பணியாளர்கள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி தங்களுடைய உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களை பாதிக்காத வகையில் இவர்களுடைய போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் துப்புரவு பணியாளர்களை போலீசார் நடத்திய விதம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக தொழிலாளர்களுக்காக எப்போதும் நாங்கள் துணை நிற்போம் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் கொடுத்த உறுதி மொழியை காப்பாற்றாமல் தற்பொழுது அவர்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தி வருவது பெரும் பின்னடைவை தருகிறது.
அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டு வந்த துப்புரவு பணியாளர்கள் மீது நீதிமன்ற உத்தரவின்படி போலீசார் திடீர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் பெண்கள் மற்றும் முதியவர் என அனைவரும் பாரபட்சம் எதுவும் இல்லாமல் கைது செய்யப்பட்டு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் துப்புரவு தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை, நியாயமான ஊதியம் மற்றும் பாதுகாப்பான பணி போன்றவை அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது ஆட்சிக்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் தேர்தலுக்கு முன் ஒரு முகம் தற்பொழுது ஒரு முகம் என்று திமுக இரட்டை வேடம் போடுவதாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. மீறப்பட்ட வாக்குறுதிகளால் தற்பொழுது நகரங்கள் பல இடங்கள் குப்பை மேடுகளாக உள்ளது.
