மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுத்த உறுதி!!

By : G Pradeep
சமீபத்தில் சதீஷ்கர் மாநிலத்தில் உள்ள கர்ரேகுட்டா மலையில் மாநில காவல்துறை, மாவட்ட ரிசர்வ் போலீஸ் படை, சிஆர்பிஎப். வீரர்கள் மற்றும் கோப்ரா படையினர் இணைந்து நிகழ்த்திய ரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் நடவடிக்கை தொடர்பாக பாராட்டு விழா நடந்தது.
இதற்கு பாராட்டுகளை தெரிவித்த மத்திய துறை அமைச்சரான அமித்ஷா பாராட்டு விழாவில் தொடர்ந்து பேசினார். அவர் கூறுகையில் இந்த ஆபரேஷனில் கலந்து கொண்ட வீரர்கள் மிகவும் துணிச்சலோடு தைரியத்தோடும் செயல்பட்டு வரலாற்றில் யாராலும் அழிக்க முடியாத ஒரு சாதனையை படைத்துள்ளனர் என்றும், இது மிகவும் பாராட்டக்கூடிய விஷயம் என கூறியுள்ளார்.
தற்போது தொடர்ச்சியாக தீவிரவாத தூண்டுதல்கள் இருந்து வந்த போதிலும் பாதுகாப்பு படையில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் மிகவும் துணிச்சலோடு செயல்பட்டு ஒட்டுமொத்த நக்சல் தள முகாமை வெற்றிகரமாக அழித்தனர்.
இதுபோல இந்தியாவில் பல இடங்கள் இன்னும் வளர்ச்சி அடையாமல் இது போன்ற நக்சலால் சேதமடைந்து வருவது, பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் போன்றவை சீர் குலைந்து போகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டிலுள்ள அனைத்து நக்சல்வாதத்தையும் ஒழித்து இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற உறுதியளிப்பதாக அமித்ஷா கூறியுள்ளார்.
