பயனற்று கிடக்கும் பேருந்து நிலையம்!! முதலமைச்சர் திறந்து வைத்த பேருந்துக்கு இந்த நிலைமையா??

By : G Pradeep
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மக்களுக்கு பயன்படும் வகையில் பல கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இந்த பேருந்து நிலையம் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக வராமல் உள்ளதாக பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
சோழவந்தான் பகுதியில் இருக்கும் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் வைக்கப்பட்ட மக்கள் கோரிக்கையின் படி கடந்த 2014 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் மேம்பாலம் போன்றவற்றை கட்டுவதற்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த கட்டுமான பணி மிகவும் மெதுவாக நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு பேருந்து நிலையத்தின் வேலை முடிவடைந்த நிலையில் அதனை மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். என்னதான் மு.க.ஸ்டாலின் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தாலும் கூட அப்பகுதியில் அமைந்திருக்கும் சர்வீஸ் சாலைகள், ரவுண்டானா போன்றவை அமைக்கப்படாததால் எந்தப் பேருந்தும் நிலையத்திற்குள் செல்வது இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பல அதிகாரிகளிடம் இது குறித்து பேசினாலும் எந்த ஒரு மாற்றமும் நிகழவில்லை என்றும் இத்தனை கோடி செலவழித்தும் இந்த பேருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் வெறும் காட்சி பொருளாக உள்ளது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
